27 நவம்பர் 2011

மொபைலில் அசுர வேகத்தில் உலவ


தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மொபைலிலும் browser ஐ வைத்து அசுர வேகத்தில் உலவுவதற்க்கு வந்து விட்டது binu browser.இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும்
மிகவும் வித்தியாசமானது.


இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.
இது முற்றிலும் இலவசமான ஒன்று. இதனை தரவிறக்க

25 நவம்பர் 2011

Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்


Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?

இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில்
உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய
எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில்
எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )
இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico

இது என்ன வைரஸா ?

நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள் உங்களின் ஒவ்வொரு
டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவல் அடைகின்றன.
பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும்.இதனால் உங்கள்
கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது.இக்கோப்புகளை
சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.


இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள் ,

1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது .
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.

Registry Disabled,

Task manager Disabled,

Enable Folders options

Enable run

Enable command prompt

மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.

3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)

இப்பொழுது பல கணினிகளில் இந்த சிக்கல்களை நான் கண்டேன்.
இதற்குப்போய் Registry இல் மாற்றம் செய்வது , Gpedit.msc இல்
மாற்றம் செய்வது போன்ற சிக்கல் இல்லாமல் எளிய முறையில் எல்லாவற்றையும் நீக்குகிறது. தலை வலி இல்லாமல் இதனை
பயன்படுத்தி நீக்கி கணினியின் வேகத்தையும் கூட்டுங்கள் நண்பர்களே!

தரவிறக்கச்சுட்டி : ( வெறும் 625 KB தான் )

உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!

நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,
உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில்
யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)
மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் பதிவு செய்யவும் முதலில் .

http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp

அதில் பெயர், மின்னஞ்சல் , உங்கள் மொபைல் எண் போன்றவற்றை தந்தால்
உங்கள் கைபேசிக்கு ஒரு குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே எண் அனுப்பப்படும்.

way2sms கணக்கில் 4 இலக்க சங்கேதே எண் கொடுத்து உள்ளே சென்றால் புதிய
password கேட்கும். அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab - ஐத்தேர்வு செய்தால்
ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு உருவாக்க பயனர் சொல் கேட்கும் .

உதாரணம் : example@way2sms.com
நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms கணக்கு உருவாக்கப்படும்.

GMail

Gmail பயனராய் இருந்தால் உங்கள் gmail அமைப்புகள் செல்லவும் . அதில்
Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில்
தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே
keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து சேமித்தால் போதும்.

Yahoo.co.in

உங்கள் yahoo கணக்கில் சென்று options-> Mail options செல்லவும்.
அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு
செய்யவும்.

Forward பகுதியில் உங்கள் way2sms முகவரியைத்தரவும். சேமிக்கவும்.

பின்னர் Way2sms கணக்கில் நுழைந்து Settings பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்யவும்.
Mobile preference பகுதியில் Alert me whenever கொடுங்கள்.
Time settings - ல் All 7 days & Round the clock கொடுங்கள். சேமியுங்கள்.

இனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்
உங்கள் கைபேசியில் அறிவிப்பாய் வந்து சேரும்.


குறிப்பு:

1.இது yahoo.co.in மற்றும் gmail க்கு மட்டுமே பொருந்தும்.
2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும். மறுபடியும் நீங்கள் உங்கள்
way2sms கணக்கில் நுழைந்து புதுபிக்கவேண்டும்.(Renew)
3.இதில் நீங்கள் இலவசமாக குறுந்தவகலும் (sms) அனுப்பலாம் இந்தியாவிற்குள்.
4.இங்கிருந்தே நீங்கள் உரையாடவும் முடியும் (Chatting)

இலவசமாக SMS அனுப்புவதற்கான தளங்கள்


நாம் அன்றாடம் SMS அனுப்புவோம்.ஒரு SMS-க்கு 50 சதம் 60 சதம் செலவழித்து SMS அனுப்புவோம்.
அல்லது நாள்தோறும் அதற்கு RELOAD போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 சதம் செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக SMS அனுப்பலாமே.
நமக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம் .

SMS Pup

ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.
PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்.

வலைத்தளத்துக்கு செல்ல சுட்டி

மேலும் SMS அனுப்புவதற்கான சில தளங்கள்:

1. http://www.smsze.com
2. http://160by2.com
3. http://fonet.mobi
4. http://www.chikka.com
5. http://evaphone.com/destinations
6. http://www.ring2skype.com
7. http://www.clickatell.com
8. http://www.way2sms.com
9. http://www.txtdrop.com
10. http://www.ifreesms.co.uk
11. http://www.shinyshack.com/sms
12. http://ukfreesms.com/
13. http://www.mysmsworld.com
14. http://www.uktxt.co.uk
15. http://www.sendafreesms.co.uk
16. http://www.wadja.com
17. http://text4freeonline.com
18. http://www.cbfsms.com
19. http://www.urdumaza.com
20. http://www.textme2day.com
21. http://phreakyphonez.net
22. http://reachfree.in
23. http://www.freecall.com
 

ONLINE PEOPLE Copyright © 2009 Community is Designed by Bie Converted To Community Galleria by Cool Tricks N Tips